இலங்கை-இந்திய கூட்டு கடற்படை பயிற்சி, இந்தியாவின் விசாகப் பட்டினத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கை-இந்திய கடறபடை பயிற்சி இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் 2024 டிசெம்பர் 17 முதல் 20 வரை நடைபெறவுள்ளது.
இந்த இருதரப்பு பயிற்சியில் பங்கேற்பதற்காக எஸ்.எல்.என். எஸ் சயுரா கடற்படை கப்பல் நேற்று அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தில் இருந்து இந்தியா புறப்பட்டது.
இந்த வருடாந்த பயிற்சியானது, இந்திய மற்றும் இலங்கை கடற்படைகளுக்கு இடையேயான கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதற்கும், சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதற்குமான செயற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் கடற்படை மரபுகளுக்கமைய தெற்கு கடற்படை தளபதி ரியர் அட்மிரல் சந்திம சில்வா துறைமுகத்திற்கு விஜயம் செய்து எஸ்.எல்.என்.எஸ் சயுரா கப்பலை வழியனுப்பி வைத்தார்.