
காஸாவில் உள்ள பாடசாலை வளாகத்தின் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாகவும் 30 பேர் படுகாயமடைந்ததாகவும் காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காஸா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஆண்டு ஒக்ரோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலில் 1139 இஸ் ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸாமுனைக்கு ஹமாஸ் அமைப் பினர் கடத்திச் சென்றனர்.
இதையடுத்து ஹமாஸ் அமைப்பினர் மீது போர் அறிவித்த இஸ்ரேல் ஒப்பந்த அடிப்படையில் பணயக் கைதிகள் 105 பேரை மீட்டது.
மேலும், அதிரடி மீட்பு நடவடிக்கை மூலம் பணயக் கைதிகள் 8 பேரை இஸ்ரேல் மீட்டுள்ளது.
இதனிடையே காஸா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரில் சுமார் 41 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், காஸாவில் உள்ள செய்டவுன் என்ற பகுதியில் உள்ள பாடசாலைகூடம் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 22 பேர் உயிரிழந்ததாக காஸா சுகாதாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேல் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஒரு பழைய பாடசாலை வளாகத்துக்குள் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினரின் கட் டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
