மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக மிரட்டலை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு

2 months ago



மட்டக்களப்பு நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை இரவு வந்த தொலைபேசி அழைப்பையடுத்து அந்தப் பகுதியில் விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த நீதிமன்றக் கட்டடத் தொகுதியைக் குண்டு வைத்துத் தகர்த்தப் போவதாக நீதிமன்றப் பதிவாளருக்குத் தொலைபேசி அழைப்பு ஒன்று நேற்று இரவு வந்ததையடுத்து உடனடியாகப் பொலிஸாருக்கு அவர் அறிவித்துள்ளார்

இதனையடுத்து நீதிமன்றக் கட்டடத் தொகுதிக்குப் பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டதுடன் கட்டடத்தைச் சுற்றிவர பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் விசேட பொலிஸ் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் புலனாய்வாளர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று வெள்ளிக்கிழமை தொடக்கம் இந்தப் பகுதியில் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அண்மைய பதிவுகள்