அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சிறையில் அடைக்கவேண்டும் என்று ஆபாசப் பட நடிகை ஸ்டோர்மி டானியல் வலியுறுத்தியுள்ளார்.
வணிகப் பதிவுகளை பொய்யாக்கிய வழக்கில் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ஸ்டோர்மி டானியல் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
தனது தொடர்பை இரகசியமாக வைத்திருப்பதற்காக ட்ரம்ப், ஸ்டோர்மி டானியலுக்கு பணம் வழங்கினார் என்ற குற்றச்சாட்டை அடிப்படையாக வைத்தே இந்த நீதிமன்ற வழக்கு இடம் பெற்றது.
டொனால்ட் ட்ரம்ப் முற்றிலும் யதார்த்தத்துடன் தொடர்பில்லாதவர் என்றும், ட்ரம்புக்கு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்,
வறியவர்களுக்கான சமூக சேவையில் ஈடுபட உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டோர்மி டானியல் தெரிவித்துள்ளார்.