இனப்படுகொலைகளுக்காக ராஜபக்சக்களுக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்.-- கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் பொலியேவ் வலியுறுத்து

தமிழர்கள் மீதான இனப்படுகொலைகளுக்காக ராஜபக்சக்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என கனேடிய எதிர்க்கட்சித் தலைவர் பொலியேவ் வலியுறுத்தியுள்ளார்.
அண்மையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்று புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஜனாதிபதி அநுரகு திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பில் முன்மொழியப்பட்ட பிரேரணையை முற்றாக நிராகரித்தமைக்கும் பொலியேவ் தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார்.
'தமிழ் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் மீறல்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும்.
நாம் ராஜபக்சக்களை சர்வதேச அரங்கில் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
இதுவே என் நிலைப்பாடு. இதை நான் தீர்க்கமாக முன்னிறுத்துகின்றேன்' என்றும் பொலியேவ் கூறியுள்ளார்.
கென்சர்வேடிவ் கட்சியின் ப்ரையன் மல்ரொனியே முதன்முறையாக தமிழர்களுக்கு கனடாவுக்குள் இடமளித்தனர்.
அத்துடன், எமது கட்சியைச் சேர்ந்த ஜோன் பெய்ர்ட் மற்றும் ஸ்ரீவன் ஹார்பர் ஆகியோர் கடந்த கால அரசாங்கத்தால் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் எதிர்ப்பை வெளிக்காட்டும் வகையில் கொழும்பில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்தனர்.
எனவே தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கன்சர் வேடிவ் முன்வைப்பது இது முதல் முறையல்ல என்றும் பொலியேவ் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
