கோத்தாபய ராஜபக்ச ஆட்சியில் மருத்துவ மோசடி குறித்த விசாரணை முன்னெடுப்பு.-- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவிப்பு
3 weeks ago
முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் மருத்துவத்துறையில் இடம்பெற்ற மோசடி குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமகால அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தொற்றுக் காலத்தில் தடுப்பூசிகள் மற்றும் விரைவான என்டிஜென் சோதனைக் கருவிகளின் கொள்வனவுக்காக 3.2 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதில், 2.2 பில்லியன் ரூபா, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனத்துக்கு செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த மோசடி குறித்த விவரங்கள் எதிர்காலத்தில் நாடாளுமன்றத் துக்கு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.