இலங்கையில் சட்டவிரோதகமாக வாகனங்களை இறக்குமதி செய்தவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவும்- இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு பணிப்பு
6 months ago

கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் சட்டவிரோதமான முறையில் சொகுசு வாகனங்களை இறக்குமதி செய்து 50 பில்லியன் ரூபாவுக்கு மேல் நட்டத்தை ஏற்படுத்தியவர்களை உடனடி யாக கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
வாகனங்களை பறிமுதல் செய்வதோடு மாத்திரம் நிற்காமல், சட்டவிரோத இறக்குமதியில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறும் கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 200 வாகனங்களில் 20 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழு முன்வைத்த உண்மைகளை ஆராய்ந்த நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
