வேலைநிறுத்தத்தினால் ஏற்பட்ட சிக்கல் தேங்கிக்கிடக்கும் 12 இலட்சம் கடிதங்கள்
தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மத்திய தபால் பரிவர்த்தனை மற்றும் ஏனைய தபால் நிலையங்களில் கிட் டத்தட்ட 12 இலட்சம் கடிதங்கள் மற் றும் பொதிகள் தேங்கிக் கிடப்பதாக தபால் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
மத்திய தபால் பரிமாற்றத்தில் சுமார் 07 இலட் சம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தபால் பொதிகள் சிக்கியுள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்தார்.
மூன்று கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் கடந்த இரு நாட்கள் தொடர்ந்து 48 மணிநேரம் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடு பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
