சம்பந்தனின் இறுதிச் சடங்கில் ஸ்ராலின்

6 months ago

தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரான இரா.சம்பந் தனின் இறுதிச் சடங்கில் தமிழகத்தின் முதல்வரான ஸ்டாலின் கலந்துகொள்ள வாய்ப்புகள் உள்ளன என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இரா.சம்பந்தனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக பிரமுகர்கள் பலர் வரவுள்ளனர். இந்தியாவின் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, சம்பந்தனின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வரவுள்ளார். இதை அவர் என்னிடம் உறுதிப்ப டுத்தியுள்ளார்.

இதேவேளை - தமிழக முதல்வர் ஸ்டாலினும் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவுள்ளாரென தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவருடைய பங்கேற்புத் தொடர்பில் உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை - சம்பந்தனின் இறுதிச் சடங்கில் பொதுமக்கள் கலந்துகொள்வதற்காக சிறப்புப் போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன- என்றார்.



அண்மைய பதிவுகள்