முன்னாள் ஜனாதிபதி ரணில் 26 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளார்.
6 months ago

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 26 மாதங்களுக்குள் குறைந்த பட்சம் 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன்களை பெற்றுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் கற்கைப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துக்கோரள இதனைத் தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மொத்த உள்நாட்டு கடன் அளவு 12,442 பில்லியன் ரூபாவாக காணப்பட்டது.
2024 ஜூன் மாதமளவில் 17,555 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பேராசிரியர் மேலும் கருத்து தெரிவித்த அவர்- 5,113 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடன் தேறியவகையில் அதிகரித்துள்மை தொடர்பில் அந்நிய செலாவணி விகித அதிகரிப்பினை உள்ளிட்ட துணை நிலைக் காரணிகள் எதுவுமே தாக்கம் ஏற்படுத்துவது இல்லையென தெளிவுபடுத்தினார்.
அதாவது நேரடியாகவே கடன் பெற்றமையால் இந்த கடன்தொகை அதிகரித்துள்ளது என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
