
சமகால அரசாங்கத்தில் அமைச்சர்களாக செயற்படும் ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் செல்லுபடியாகும் என உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்து கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளைப் பெற்றமையே அதற்குக் காரணம்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் செயற்குழு அவர்களின் கட்சி உறுப்பினர் பதவியை ரத்து செய்ததை எதிர்த்து அவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை விஜித் மலல்கொட, அச்சல வெங்கப்புலி மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
