யாழ்.தென்மராட்சி அபிவிருத்தி கழகத்தின் ஊடாக றொட்றிக் கழகம் வழங்கிய மயக்க மருந்து உபகரணத்தின் ஒருபகுதி சாவகச்சேரி வைத்தியசாலையில் காணாமல் போயுள்ளது.
மாகாண சுகாதார பணிமனைக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் ஆரம்ப புலனாய்வு விசாரணைக் குழு அமைப்பதற்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்
தென்மராட்சி மக்களுக்காக பொது அமைப்பினரால் வழங்கப்பட்ட பொருட்களை கொள்ளையடித்த வர்கள் யார்?
குறித்த முறைப்பாடு தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட மூவரும் வைத்திய துறை சார்ந்தவர்கள் .
நீதியான விசாரணை இடம்பெறுமா? என்று அமைப்புகள் கேட்டு நிற்கின்றனர்.