இலங்கை மாணவர்களுக்கு சீருடைத் துணியை விநியோகிக்க சீன அரசின் நன்கொடையைப் பொறுப்பேற்க அமைச்சரவை அங்கீகாரம்
5 months ago

2025 ஆம் ஆண்டுக்கான அனைத்து பாடசாலைகள் மற்றும் பிரிவினாக்களில் கல்வி பயில்கின்ற மாணவர்களுக்கு சீருடைத் துணியை விநியோகிப்பதற்கான சீன அரசின் நன்கொடையைப் பொறுப்பேற்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற போதே அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.
குறித்த துணித் தொகைக்கு உரியவாறு கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட்டுள்ள மாதிரிகளுக்கமைய, இலங்கை நெசவு மற்றும் ஆடைக் கைத்தொழில் நிறுவகத்தின் மூலமாக பரிசீலிக்கப்பட்ட பின்னர், குறித்த சீருடைத் துணிகள் பாடசாலை மாணவர்களின் பயன்பாட்டுக்கு பொருத்தமானதென விதந்துரைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
