அரச அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு
5 months ago

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகள் , அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் நிறைவேற்று பதவிகளில் உள்ள அதிகாரிகள் தமக்கு வழங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதிக்குள் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
நேற்று (12) அறிக்கையொன்றை வெளியிட்ட அமைச்சு, குறித்த கால வரையறைக்குள் அவர்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி மற்றும் குண்டுகளை ஒப்படைக்குமாறு கோரியுள்ளது.
துப்பாக்கிகளை பெற்ற நபர்களின் பட்டியலில் உள்ளவர்களிடம் விசாரணை செய்து ஆயுதங்களை கைப்பற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் OIC களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
