பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் வெளிநாட்டினர் உட்பட பல்லாயிரம் பேர் திரண்டனர்.

4 months ago


இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழ்க் கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் வெளி நாட்டினர் உட்பட பல்லாயிரம் பேர் திரண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட நீதிபதி வி. சிவஞானம் கூறுகையில், "அவன் இன்றி நாம் எதுவும் செய்ய முடியாது என்பதை உணர்த்துவதன் பயன்தான் இந்த முருகன் மாநாடு. இறைவனை எப்படி எல்லாம் பாடுவோம் என்று நம்முடைய முன்னோர்களும், அறிஞர்களும் பாடிக்காட்டி இருக்கிறார்கள்”- என்றார்.

நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தெரிவிக்கையில், "தமிழ் அறி ஞர்கள் மற்றும் இந்து சமய அற நிலையத்துறையினர் அனைவரையும் ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்துவது தமிழக அரசுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது" - என்றார்.