சிங்கப்பூர் பத்திரிகையாளர் மன்றத்தின் குழுவினர் வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனுடன் பேச்சு நடத்தினர்.
வடக்கு மாகாணத்தில் இருந்து உற்பத்திகளை ஏற்றுமதி செய்தல் மற்றும் மீன்பிடி, விவசாயம், கால்நடைகளின் உற்பத்திச் செயற்பாடுகள் தொடர்பில் சிங்கப்பூர் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் பட்ரிக் டானியல் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுடன் பேச்சுக்கள் நடத்தினர்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை அவர்கள் சந்தித்தனர்.
இதன்போதே மேற்படி விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இதன்போது வடக்கு மாகாண சுற்றுலாத்துறை தொடர்பான விவரங்கள் ஆளுநர் செயலகத்தால் ஒளிபதிவு மூலம் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டன.
வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறைக்கான போக்குவரத்து வசதி வாய்ப்புகள் தொடர்பாகவும் வடக்கு மாகாண அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகள் தொடர்பாகவும் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
வடக்கு மாகாணத்தில் இருந்து உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்தல் தொடர்பாகவும் வினவப்பட்டது.
மீன்பிடி,விவசாயம், கால்நடைகளின் உற்பத்தி தொடர்பான செயற்பாடுகள் தொடர்பில் உரையாடப்பட்டது.
பொருளா தாரத்தை மேம்படுத்துவதற்கு தடையாக உள்ள காரணிகளை எவ்வாறு வெற்றி கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் கருத்துக்களை இரு தரப்பினரும் பரிமாறிக்கொண்டனர்.
முன்னர் இடம்பெற்ற தவறுகளால் எமது நாடு முன்னேற்றம் அடையாமல் காணப்படுகின்றது.
திட்டமிடலை சரியாக நடைமுறைப்படுத்தவும், சாதகமாகத் செயற்படுத்தவும் தவறுகளைத் திருத்தி சிறப்பாக நாட்டை கட்டிஎழுப்பவும் தற்போதுள்ள அரசாங்கம் முனைப்பாக உள்ளது,
பல விடயங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்து கொண்டுள்ளது என வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.