யாழ்.கொழும்பு இடையே மேலதிகமாக இரண்டு ரயில் சேவை ஆரம்பம்

1 day ago



யாழ்ப்பாணம் -கொழும்பு இடையே மேலதிகமாக இரண்டு ரயில் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

"யாழ்ப்பாணம் - கொழும்பு இடையே நீண்டகாலமாக ஒரேயொரு ரயில் சேவை மட்டுமே இடம்பெற்று வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பான பல்வேறு முறைப்பாடுகள் பொது மக்களால் என்னிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் ஆராய்ந்திருந்ததுடன், போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

எனது வேண்டுகோளுக்கு அமைவாக 15ஆம் திகதியில் இருந்து ஒரு ரயில் சேவையும், 31ஆம் திகதியில் இருந்து பிறிதொரு ரயில் சேவையும் ஆரம்பிக்கப்படும்" என்றார்.



அண்மைய பதிவுகள்