பூசணிக்காயை படகாக்கி 73 km பயணித்து உலக சாதனை.-- அமெரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ் டன்சென்.

2 months ago



500 கிலோ பூசணிக்காயை படகாக பயன்படுத்தி 73 கிலோ மீற்றர் பயணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார் அமெரிக்காவைச் சேர்ந்த கேரி கிறிஸ் டன்சென்.

அமெரிக்காவின் ஆரேகான் மாகாணத்தின் ஹேப்பி வேலி பகுதியைச் சேர்ந்தவர் கேரி கிறிஸ்டன்சென். பெரிய                    பூசணிக்காய் ஒன்றை படகாக  பயன்படுத்தி அதில் பயணம் செய்ய வேண்டும் என்பது இவருக்கு பல வருட கனவாக இருந்தது.

இதற்காக, வளர்க்கப்பட்ட பூசணிக்காய், ஒக்ரோபர்          தொடக்கத்தில் அறுவடை செய்யப்பட்டது.

429. 26 செற்றி மீற்றர் சுற்றவுடன் 555.2 கிலோ எடை கொண்டுள்ளது.

ஒரு பெரிய பியானோ அல்லது பெரிய ஒட்டகம் அளவுக்கு உள்ள இந்த பூசணிக்காய்க்கு பங்கி லேப்ஸ் டர் என கேரி பெயரிட்டார்.

73.5 கிலோ மீற்றர் பயணம் செய்துள்ளார். இதற்காக 26 மணிநேரம் செலவிட்டுள்ளார். தொடக்கத்தில் பலத்த காற்று வீசியுள்ளது. அலைகளும் அவரை அச்சுறுத்தின.

எனினும், துணிச்சலாக படகை செலுத்தி பாதுகாப்பான இடத்தில் இறங்கியுள்ளார்.

இந்த பயணத்தில் அவர் தூங்காமல் சென்றுள்ளார். அவர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பிடித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்