திருத்த வேலைகளால் நிறுத்தப்பட்டிருந்த வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது.
10 மாதங்களாக முன்னெடுத்த திருத்த வேலைகளால் நிறுத்தப்பட்டிருந்த வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவை மீண்டும் நிறுத்தப்பட்டது.
வடக்கு ரயில் பாதையில் மஹவ சந்தியில் இருந்து அநுராதபுரம் வரையிலான ரயில் பாதையில் சமிக்ஞைகளை சரிவர பொருத்தாத காரணத்தால் ரயில் சேவைகள் தற்போது முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பூரண திருத்த திட்டத்தின் கீழ் வடக்கு ரயில் சேவையை நிறுத்தி, கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் 10 மாதங்களாக திருத்த வேலைகள் நடைபெற்று வந்தன.
எனினும், தற்போது ரயில் பாதையின் திருத்தப் பணிகள் நிறைவடைந்த பின்னரும் கூட ரயில் சேவைக்குத் தேவையான சமிக்ஞைகளை பொருத்தாத காரணத்தால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
91. 27 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் திருத்தப்பட்ட மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான ரயில் பாதையில் 66. 4 கிலோமீற்றர் தூரத்திலான மஹவ தொடக்கம் அநுராதபுரம் வரையிலான பகுதியில் சமிக்ஞைகள் நிறுவப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.