ஜனாதிபதித் தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் எத்தனை வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் பெண்களின் பிரதிநிதித்துவம் வழங்கப்படாமை மிகவும் வருத்தமளிக்கும் விடயம் என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் கீதா குமாரசிங்க தெரி வித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் கூட பெண்களுக்கு உரிய இடமும் சமமான இடமும் வழங்கப்பட வேண்டும் என கட்சித் தலைவர்கள் பெருமையுடன் கூறினாலும் பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 6 சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாட்டில் பெண் உரிமைகள் தொடர்பில் அனைத்து கட்சித் தலைவர்களும் அதிக அக்கறை காட்ட வேண்டும் எனவும், இம்முறை பெண் பிரதிநிதித்துவம் இல்லாத ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் துடுப்பு இல்லாத படகு போன்றது எனவும் அமைச்சர் கீதா குமாரசிங்க மேலும் கூறினார்.