சவுதி அரேபியாவில் வெப்பத்தால் ஹஜ் யாத்திரையில் 1,300 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

6 months ago

சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்களில் சுமார் 1,300 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்த நாட்டு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 83 சதவீதம் பேர் யாத்திரை மேற்கொள்ள முறைப்படி பதிவு செய்யாதவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சவுதி அதிகாரபூர்வமாக உறுதி செய்தது.

ஹஜ் யாத்திரை மேற்கொண்டவர்கள் நீண்ட நேரம் சூரிய ஒளியின் கீழ் வெகு தூரம் நடந்து வந்ததும், தங்கும் வசதி இல்லாததும் இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக எகிப்தை சேர்ந்த 658 பேர் உயிரிழந்தனர். அதில் 630 பேர் முறைப்படி பதிவு செய்யாதவர்கள்.

கடந்த 50 ஆண்டுகளில் மக்கள் அதிகம் கூடும் மதம் சார்ந்த நிகழ்வுகளில் சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர். அதில் சவுதியில் மட்டும் 5,000 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அண்மைய பதிவுகள்