வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக மேலும் ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தது
5 months ago

வன்னி தேர்தல் மாவட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஊடாகமேலும் ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெற்றுள்ளது.
அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தரான முஹம்மது இஸ்மாயில் முத்துமுஹம்மது என்பவருக்கே குறித்த தேசிய பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை மக்கள் காங்கிரசானது இம்முறை பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தனித்து போட்டயிட்டு ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டதுடன், வன்னி உட்பட ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து போட்டியிட்டிருந்தது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
