யாழ். வைற் ஹவுஸ் மண்டபத்தில் நேற்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினர் தமது தோழரான கனடா ரவி பொன்னுத்துரைக்கு அஞ்சலி

2 months ago



யாழ்ப்பாணம் வைற் ஹவுஸ் மண்டபத்தில் நேற்று ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்சியினர் தமது தோழரான கனடாவை வசிப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற ரவி பொன்னுத்துரைக்கு அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் அஞ்சலி செய்தனர்.

ரவி பொன்னுத்துரை "வைகறை” இதழின் ஆசிரியாராகவும், சுற்றுச் சூழல் ஆர்வலராகவும் அதற்காக சர்வதேச நாடுகளுடனும் உறவைப் பேணுபவராகவும் தாயகத்தில் மரம் நடுகை, வீட்டுத் தோட்டம் போன்ற விடயங்களில் பல்கலைக் கழக, பாடசாலை மாணவர்களை ஈடுபடுத்துவதிலும் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.

இவர் வைகறை ரவி என இலக்கிய வட்டத்தில் அறியப்பட்டாலும் ஹெஸ் ரவி என்றே கட்சித் தோழர்களால் அழைக்கப்பட்டார்.

அதன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையில் நடந்த அஞ்சலி நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் கலந்துகொண்டு அஞ்சலி உரையாற்றினர்.

அவரது பூதவுடல் நேற்று மாலை வரை அவர் பிறந்த இல்லத்தில் உறவினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் கனடா கொண்டு செல்லப்படுவதற்காகக் கொழும்புக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அண்மைய பதிவுகள்