இந்தியா-இலங்கை இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்ட ஒப்பந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல்

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அமைச்சரவைப் பத்திரம் ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2371 மில்லியன் ரூபா வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் சமூக வலுவூட்டல் துறைகளில் கவனம் செலுத்த எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இதன் கீழ் 33 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் உட் டமைப்பு அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி மற்றும் மாகாண மக்களின் சமூக வலுவூட்டல் என்பன இத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் நோக்கங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இதன்படி, கல்விக்காக 315 மில்லியன் ரூபாவும், சுகாதாரத்திற்காக 780 மில்லியன் ரூபாவும், விவசாயத்திற்கு 620 மில்லியன் ரூபாவும், மீன்பிடித்துறைக்கு 230 மில்லியன் ரூபாவும் உட்பட 33 திட்டங்களுக்கு 2371 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
