இலங்கை அரசினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "கிளீன் சிறிலங்கா" வேலைத் திட்டம் நாளை 1ஆம் திகதி ஆரம்பம்
3 months ago

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள "கிளீன் சிறிலங்கா" வேலைத் திட்டம் நாளை 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
"கிளீன் சிறிலங்கா" திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணியொன்று அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ்.குமாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள் உட்பட 18பேர் ஜனாதிபதி செயலணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
"கிளீன் சிறிலங்கா" திட்டத்தை திட்டமிடல், வழிகாட்டுதல், நடைமுறைப்படுத்துதல், முன்னேற்றத்தை மீளாய்வு செய்தல் மற்றும் குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவு செய்தல் இந்த ஜனாதிபதி செயலணியின் பொறுப்புகள் ஆகும்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
