ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
4 months ago
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் இந்த துண்டுப்பிரசுரங்கள் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செ.கஜேந்திரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கோரி யாழில் தொடரும் துண்டுப்பிரசுர வழங்கல் | Pamphlet Distribution In Jaffna Boycott Election
நிலைப்பாடு
இதன்போது அவர்கள், துண்டுப்பிரசுரங்களை வழங்கி மக்களுக்கு தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.