யாழ்.போதனா மருத்துவமனையில் எலிக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த இருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளனர்.

3 months ago



யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் எலிக் காய்ச்சலுக்குச் சிகிச்சை பெற்றுவந்த இருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளனர்.

முழங்காவில் மற்றும் வடமராட்சி பகுதிகளைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் ஒருவருக்கு 50 வயது என்றும், மற்றையவருக்கு 24 வயது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இறப்புகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் சத்தியமூர்த்தியும் உறுதிப்படுத்தியுள்ளார்.