
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று நாளைய தினம் திங்கட்கிழமை (22) கைச்சாத்திடப்படவுள்ள நிலையில், ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கலந்துரையாடல் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றது.
யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் உள்ள புளொட் அமைப்பின் அலுவலகத்தில் அமைப்பின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதில் ரெலோ அமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசியக் கட்சியின் தலைவர் சட்டத்தரணி என்.சிறீகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன் மற்றும் துளசி ஆகியோர் பங்காளிக் கட்சிகள் சார்பில் கலந்துகொண்டனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
