2024 பாராளுமன்ற தேர்தலில் கூடுதல் செலவுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவிப்பு
1 month ago
பாராளுமன்றத் தேர்தலுக்கு அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் இருப்பதால், கூடுதல் வாக்கு எண்ணும் மையங்கள், ஆவணப் பணிகள், வாக்குச் சீட்டு அச்சிடுதல் போன்றவற்றில் கூடுதல் செலவுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்துக்கும் ஏற்ப வாக்குச்சீட்டுகளில் பெரும் வேறுபாடுகள் உள்ளன.
கடந்த முறை 1713 ஆக இருந்த வாக்கு எண்ணும் மையங்களின் எண்ணிக்கை இம்முறை 2034 ஆக அதிகரித்துள்ளது.
இவை அனைத்தும் தேர்தல் அலுவலகத்துக்கு கூடுதல் செலவாகும்.
இருப்பினும், வாக்குப் பதிவைத் தொடர்ந்து சரியான மதிப்பீடுகள் செய்யப்பட்ட பின்னரே துல்லியமான செலவு உயர்வை அறிய முடியும் என்றார்.