மட்டக்களப்பு கொக்குவில் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 19 வயது இளைஞன் படுகொலை .

3 months ago


மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமத்தில் வீதியில் சத்தம் எழுப்பியவாறு  மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற 19 வயது இளைஞன் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட 30 வயது நபர் பொலிஸாரால் கைது                    செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.

சுவிஸ் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞனே உயிரிழந்தார்.

சம்பவ தினத்தன்று இரவு வீதியில் அதிக ஒலி எழுப்பியவாறு மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனுடன் சிலர் தகராறில் ஈடுபட்டனர்.

அப்போது, இளைஞனின் தந்தை தனது மகனை அங்கிருந்து மீட்டு அழைத்துச் சென்று கொண்டிருந்த போது, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த கூட்டத்தினர், இளைஞனின் கழுத்துப் பகுதியை குறிவைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த இளைஞன் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்டவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவரை பொலிஸார் கைதுசெய்தனர்.


அண்மைய பதிவுகள்