15 நாட்களுக்குள் இஸ்ரேல் இராணுவம் உள்ளிட்ட படைகளின் தாக்குதல்களால் லெபனானில் 4,000 பேர் உயிரிழந்தனர்.

3 months ago


செப்ரெம்பர் 23ஆம் திகதிக்கும் ஒக்ரோபர் 7ஆம் திகதிக்கும் இடைப்பட்ட 15 நாட்களுக்குள் இஸ்ரேல் இராணுவம் உள்ளிட்ட படைகளின் தாக்குதல்களால் லெபனானில் 4,000 பேர் உயிரிழந்தனர்.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப் படை கடந்த 27ஆம் திகதி நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார்.

இதன் பிறகு இரு தரப்புக்கும்    இடையிலான போர் தீவிரமடைந்தது. இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் 2,000இற்கும் மேற்பட்ட முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளன.

440 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேல் தாக்குதலில் லெபனான் முழுவதும் 4,000இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

3,100இற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் தரைமட்டமாகின.

இஸ்ரேல் போர் விமானங்கள், ட்ரோன்களின் தாக்குதலுக்கு அஞ்சி லெபனான் மக்கள் அண்டை நாடான சிரியாவுக்கு தப்பிச் செல்கின்றனர்.

பெய்ரூட் - டமாஸ்கஸ் வீதியிலுள்ள முக்கிய பாலங்கள் மற்றும் முக்கிய இடங்களை இஸ்ரேல் அழித்ததால் லெபனான் மக்கள் சிரியாவுக்கு தப்பிச் செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இஸ்ரேல் எல்லையை ஒட்டிய லெபனான் பகுதிகளில் ஹிஸ்புல்லா போராளிகள் சுரங்கப் பாதைகளில் இருந்து இஸ்ரேலை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர்.

தற்போது லெபனான் எல்லைக்குள் தரைவழியாக நுழைந்துள்ள இஸ்ரேல் படையினர் சுரங்கப் பாதைகளை கண்ட றிந்து குண்டுகள் மூலம் தகர்த்து வருகின்றனர்.

கடந்த சனிக்கிழமை 250 மீற்றர் நீளம் கொண்ட சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வெடிகுண்டுகள், ஏவுகணைகளை பதுக்கி வைத்திருந்தனர்.

அவை பறிமுதல் செய்யப்பட்டன என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.



அண்மைய பதிவுகள்