மியான்மரில் இருந்து வரும் போது, படகில் உயிரிழந்த ஐந்து பேரை கடலில் வீசிவிட்டு வந்தோம்.-- ரொஹிங்ய அகதிகள் வாக்குமூலம்

2 weeks ago



மியான்மரில் இருந்து வரும் போது, படகில் உயிரிழந்த ஐந்து பேரை கடலில் வீசிவிட்டு வந்தோம் என்று ரொஹிங்ய அகதிகள் இலங்கை விசாரணையாளர்களிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

மியான்மரில் இருந்து 115 பேருடன் பயணித்த ரொஹிங்ய அகதிகளின் படகு நேற்று முன்தினம் முல்லைத்தீவுக் கடற்பகுதியில் கரையொதுங்கியது.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு திருகோணமலைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அவர்கள் திருகோணமலை கடற்படையிடம் நேற்றுப் பாரப்படுத்தப்பட்ட நிலையில், அவர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போதே, தம்மில் ஐந்து பேர் சுகவீனம் ஏற்பட்டு உயிரிழந்து விட்டனர் என்றும் அவர்களின் ஜனாஸாவைக் கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் விசாரணையாளர்களிடம் ரொஹிங்ய அகதிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், இலங்கைக்கு வரவேண்டும் என்ற நோக்கத்தில் தாம் பயணப்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அகதிகளை பாடசாலையொன்றில் தங்க வைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மியன்மார் பணத்தில் 8 இலட்சம் ரூபா வழங்கி படகினை  கொள்வனவு செய்து, கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டோம்.

மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை UN பாராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கைக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள்.

இந்நிலையில் இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர்.

அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று வந்ததாகவும் தெரிவிக்கின்றனர்.



அண்மைய பதிவுகள்