வடமாகாண ஆளுநராக புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற நா.வேதநாயகனை யாழ். இந்தியத் துணைத் தூதுவர் சந்தித்து வாழ்த்து.
3 months ago
வடக்கு மாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சந்திப்பு நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுக்கும் வடக்கு மாகாணத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டதாகவும் தெரியவருகிறது