2024 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை அப்படியே செயற்படுத்தமாட்டோம் இலங்கை அரசு அறிவிப்பு

பல தரப்பினரும் இந்தச் சட்டத்தினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கவலை தெரிவித்துள்ளமையினால் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் புதிய திருத்தங்களை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளோம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிகழ்நிலை முறைகேடுகளைத் தடுப்பதில் சட்டத்தின் பலனைப் பேணுவதுடன், சட்டத்தின் பாதகமான விளைவுகளைக் குறைக்க தேவையான மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிற்றல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.
தேவையான திருத்தங்களைச் செய்த பிறகு சட்டம் செயற்படுத்தப்படும்.
தற்போதைய வடிவத்தில் நாங்கள் அதைச் செயற்படுத்தமாட்டோம்.
திருத்தப்பட வேண்டிய பல அம்சங்கள் உள்ளன.
இருப்பினும், கருத்துச் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க இந்த சட்டத்தை பயன்படுத்துவோம் பங்குதாரர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
