மன்னார் மடுவில் இந்திய வீட்டுக்கு 100 மில்லியன் ஒதுக்கீடு
இந்திய உதவித்திட்டத்தின் கீழ் மடுப் பிரதேசத்தில் குறைந்த செலவில் வீடமைக்கும் வீட்டுத்திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான கடிதங்கள் இரண்டாம் திகதி இந்தியத் தூதுவர் சந் தோஷ்ஜாவுக்கும் நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சின் செயலர் சத்தியானந்தாவுக்குமிடையே பரிமாறப்பட்டுள்ளன.
இதற்கென நூறு மில்லியன் ரூபாவை இந்திய அரசு ஒதுக்கியுள்ளது.