மன்னார் மடு பிரதேசத்தில் இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் மீளப் பெற்றுக்கொள்வதற்கான இளையோர் முன்னணி செயலமர்வு இன்று இடம்பெற்றது.

4 months ago


மன்னார் மடு பிரதேசத்தில் இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் மீளப் பெற்றுக்கொள்வதற்கான இளையோர் முன்னணி  செயலமர்வு இன்று இடம்பெற்றது.

வடமாகாணத்தில் மாவட்ட மட்டத்தில் இளையோர் குழுக்கள் உருவாக்கப்பட்டு காணிகளை இழந்த மக்களுக்கு காணிகளை ஜனநாயக ரீதியில் மீளப் பெற்றுக்கொடுப்பதற்கான செயற்திட்டத்தின் தொடர் செயற்பாடாக மடுப் பிரதேசத்தை சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட இளையோருக்கான இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் மீள பெற்றுக் கொள்வதற்கான இளையோர் முன்னணி செயல் அமர்வு 2024 /8 /22 இன்று பாலம்பிட்டி கிராம பொதுமண்டபத்தில் நடைபெற்றது. 

பொது மக்களுக்கு உரித்தான காணிகள் அரச திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களால் அபகரிக்கப்பட்டு இன்னமும் விடுவிக்கப்படாமல் உள்ளது.

இதற்கு எதிராக ஜனநாயக ரீதியில் குரல் கொடுப்பதற்கு காணிகளை இழந்த பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தமது காணிகளை மீள பெற்றுக் கொள்வதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான இளையோர்கள் எவ்வாறான பங்களிப்புகளை செய்யலாம் என்பது தொடர்பாகவும் இச்செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அண்மைய பதிவுகள்