இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கொழும்பில் சடலமாக மீட்பு
7 months ago
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் பிராங்கோயிஸ் கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தூதுவர் பிராங்கோயிஸின் இறப்புக்கான காரணங்கள் வெளியிடப்படவில்லை.
அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்திருக்கலாம் எனவும் உடற்கூற்றுப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதல் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான பிரான்ஸ் தூதுவராக பிராங்கோயிஸ் பணியாற்றி வந்தார்.
அவருடைய மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள இலங்கை, இந்த விடயத்தில் முடியுமான அத்தனை உதவிகளையும் வழங்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளது.