கிழக்கு ஆப்பிரிக்காவில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 months ago
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள ஜீபூட்டி நாட்டில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, ஜிபூட்டி கடற்பகுதியில் இரண்டு புலம்பெயர்ந்தோர் படகுகள் மூழ்கியதில் குறைந்தது 45 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா.வின் இடம்பெயர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் விபத்துக்குள்ளான இரண்டு படகுகள் 310 பேருடன் ஏமனில் இருந்து புறப்பட்டதாகவும், இந்த சம்பவத்தில் இன்னும் பலரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது