யாழ்.நெடுந்தீவில் இருந்து உலங்குவானூர்தி மூலம் வாக்கு பெட்டி யாழ். நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டது.
6 months ago










2024 ஜனாதிபதி தேர்தல் யாழ்.நெடுந்தீவு வாக்கு நிலையங்களில் இருந்து வாக்காளர் பெட்டி உலங்குவானூர்தி மூலம் யாழ்.மத்திய கல்லூரிக்கு எடுத்துவரப்பட்டது.
இன்று (21.09.2024) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, நெடுந்தீவில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் இருந்து, வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கான உலங்குவானூர்தி பி.ப 05.10 மணிக்கு வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் தரையிறங்கியது.
நெடுந்தீவிலிருந்து உலங்குவானூர்தி மூலம் வருகை தந்த சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களையும், விமானிகளையும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் மற்றும் உதவித்தேர்தல்கள் ஆணையாளர் இ.கி. அமல்ராஜ் , மற்றும் வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஏ.ஜெ. ஹாலிங்க ஜெயசிங்க ஆகியோா் வரவேற்றார்கள்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
