கிளிநொச்சியில் மருத்துவ தவறால் குழந்தையையும் இழந்து மனைவியின் கர்ப்ப பையையும் இழந்தவரின் சோகம்

5 months ago


எனது குழந்தையையும் இழந்து நீதியும் கிட்டாது தவிக்கிறேன்!பாதிக்கப்பட்ட பொதுமகன் ஆதங்கம்

எனது குழந்தையையும் மனைவியின் கர்ப்பபையையும் இழந்து தவிக்கும் எனக்கு ஆண்டு ஒன்றாகியும் நீதி கிட்டவில்லை என்று கிளிநொச்சி - நாதன்குடியிருப்பை சேர்ந்த இ. சுரேஷ் என்பவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு கிளிநொச்சி மருத்துவமனையில் பிரசவத் துக்காக சேர்க்கப்பட்ட பெண் ஒருவரின் குழந்தை உயிரிழந்த துடன், அந்தப் பெண்ணின் கர்ப்பபையும் அகற்றப்பட்டது. இதற்கு மருத்துவ தவறே காரணம் என்று கூறப்பட்டது. இந்த நிலையிலேயே பாதிக்கப்பட்டவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், "மருத்துவ தவறு காரணமாக எனக்கு பிறந்த ஒரேயொரு குழந்தையையும் மனைவியின் கர்ப்ப பையையும் இழந்து ஆண்டு ஒன்றாகிறது. எனக்கு இழைக்கப்பட்ட இந்த மோசமான அநீதி தொடர்பில்

நான் இதுவரை பொலிஸ் நிலையம், மனித உரிமைகள் ஆணைக் குழு, சுகாதார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் என பல தரப் பினர்களிடமும் முறையிட்டேன். முறைப்பாடு கிடைத்ததாக பதில் கிடைத்ததே தவிர எனக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை.

குருக்கள் செய்தால் குற்றமில்லை என்பது போல மருத்துவ தவறுகளுக்கும் குற்றமில்லாத நிலைமையே இங்குள்ளது. என் வாழ்க்கையில் இனி ஒரு குழந்தை இல்லை. என் இளம் மனைவி இனிமேல் தாயாக முடியாது.

சில மருத்துவர்களின் அலட்சியம், கவனக்குறைவு, படித்தவர்கள் என்ற மமதையில் ஏழை நோயாளிகளின் வார்த்தைகளை செவிமடுக்காமை போன்ற காரணங்களால் ஏற்படு கின்ற அநீதிகளுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை என்பது பெரும் கவலையே. எனக்கு பிறந்த குழந்தையையும் இழந்துவிட்டேன்.

சரி நாம் இருவரும் இளம் கணவன் மனைவி எனவே இனியொரு குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நிம்மதி அடையும் முன்னே மனைவியின் கர்ப்ப பையும் அகற்றப்பட்ட செய்தி இடியாய் விழுந்தது. நாம் இருவரும் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டதாகவே உணர்கின்றோம்.

பிள்ளைகள்தொடர்பில் எங்கள் ஆசைகள், கனவுகள், எல்லாமே தகர்க்கப்பட்டுவிட்டன. எம் இருவரின் வாழ்க்கையும் சூனி யமாகிவிட்டது. பிள்ளையும் இல்லை, மனைவியின் கர்ப்ப பையும் இல்லை நீதியும் இல்லை.

ஏழைகளுக்கு நீதி எட்டாக் கனி என்பது அனுபவத்தால் புரிந்துகொண்டேன். இந்த ஒரு வருடமாக நானும் மனைவியும் அனுபவிக்கும் வேதனையும், மன உளைச்சலும் இனி எவருக்கும் ஏற்படக் கூடாது என்றே கடவுளிடம் வேண்டுகிறேன் என்றும் கூறியுள்ளார்.