ரணில் விக்கிரமசிங்க ஆட்சியின் போது 28 நாடுகளுக்கான பயண செலவு 52கோடியே 14 இலட்சத்து 47 ஆயிரத்து 975 ரூபாய் ஆகும்

2 weeks ago



ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில் 28 நாடுகளுக்குப் பயணித்துள்ளார் எனவும், இதனால் 52 கோடியே 14 இலட்சத்து 47 ஆயிரத்து 975 ரூபா செலவு ஏற்பட்டுள்ளது எனவும் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்துக்குத் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்துக்கான பதிலிலேயே இந்த விபரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

28 பயணங்களுக்கான விமானச் சீட்டை, தங்குமிட வசதி மற்றும் உணவு உட்பட சகல செலவுகள் என்ற வகையிலேயே இந்தக் கட்டணம் செலவிடப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்காவின் காலத்தில் விண்ணப்பிக்கப்பட்ட  தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பத்துக்கு அப்போது பதிலளிக்காதமையால் மேன்முறையீட்டின் பின்னர் தகவல் அறியும் ஆணைக்குழுவின் கவனத்துக்கமைய 2024.08.29 அன்று இடம்பெற்ற விசாரணைக்கமைய நவம்பர் மாதம் இந்த விபரம் ஜனாதிபதி செயலகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்