நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சிறுவர்கள் 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய சிறுவர்கள் 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ளனர்.
இந்த நிலையில், வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் கோரி, நைஜீரிய இளைஞர்கள் அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் மீது நைஜீரிய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த ஓகஸ்ட் மாதத்தில் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் 14 வயது முதல் 17 வயதுக்குட்பட்ட சிறார்கள் என் றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது தேசத் துரோகம், கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.