இஸ்ரேல் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹைப்பர் சொனிக் ஏவுகணைகளை வீசி சரமாரி தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேல் மீது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹைப்பர் சொனிக் ஏவுகணைகளை வீசி சரமாரி தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் மீது ஹவுதி கிளர்ச் சியாளர்கள் நேற்று மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சொனிக் ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கின.
இஸ்ரேல் வான்பரப்புக்குள் வந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பு தாக்கியது. ஆனாலும், ஏவுகணையின் பாகங்கள் வெடித்து சிதறின.
மேலும், ரொக்கெட்களும் இஸ்ரேலுக்குள் விழுந்தன. இதனால், இஸ்ரேலின் ரயில் நிலையத்தில் சிறுபாதிப்பு ஏற் பட்டது. மேலும், பென் ஷபென் வனப்பகுதியில் தீ விபத்து ஏற் பட்டது. இதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர்.
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஹைப்பர் சொனிக் ஏவுகணை 11 நிமிடத்தில் இஸ்ரேலை தாக்கியதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்த ஏவுகணை தாக்குதலில் காயமோ, உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலுக்குப் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.