பாகிஸ்தானில் பாடசாலை அருகே குண்டு வெடித்ததில் 5 மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர், 22 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தானில் பாடசாலை அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 5 பாடசாலை மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தாகவும், 22 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சம்பவம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள மஸ்தங் மாவட்டத்தில் இன்று காலை 8.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மஸ்தங் மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்துச் சிதறியது.
அங்கிருந்த இரு சக்கர வாகனத்தில் குண்டு வைக்கப்பட்டிருந்ததாகவும், ரீமோட் மூலம் குண்டுவெடிப்பு இடம்பெற்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் 5 பாடசாலை மாணவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 22 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் பாடசாலை மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் ஒரு பொலிஸ் வாகனம் மற்றும் சில முச்சக்கரவண்டிகள் சேதமடைந்தன.
இந்த குண்டுவெடிப்பிற்கு காரணமானவர்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.