வடமாகாணத்திற்கு மருத்துவ மற்றும் கல்வி வசதிக்காக ஜப்பான் அரசு சுமார் 50மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
2 months ago

வடக்கு மாகாணத்தில் மருத்துவ மற்றும் கல்வி வசதிகளை மேடுத்துவதற்காக ஜப்பான் அரசாங்கம் சுமார் 50மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்குதற்கான இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் வடக்கு மாகாணத்துக்கு முதன்முறையாக வந்துள்ள இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகியா இயக்மட்டா கையெழுத்திட்டார்.
இந்த நிகழ்வு வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் முன்னிலையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
இதன்போது வட மாகாணத்திலுள்ள பாதிக்கப்பட்ட சமூகங்களின் நிலையான வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்காக ஜப்பான் தூதுவர் இசோமாட்டா உறுதியளித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
