2024ஆம் ஆண்டு சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ்.திருநெல்வேலி யுசிமாஸ் நிலைய மாணவர் அணி சாதனை படைத்துள்ளது.
இந்தியாவின் தலைநகர் புது டில்லியில் சர்வதேச மனக் கணிதப் போட்டி இம்மாதம் 14ஆம் திகதி நடைபெற்றது.
இப் போட்டியில் உலகளாவிய ரீதியில் 30 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 6,000 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
இதில், இலங்கையை பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் 103 மாணவர்கள் சென்றிருந்ததோடு, திருநெல்வேலி யுசிமாஸ் நிலையத்திலிருந்து 27 மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.
யாழ்.திருநெல்வேலி யுசிமாஸ் அணியைச் சேர்ந்த அத்விதா சிந்துஜன் (7 வயது), திருவரன்கேஷிகன் (8 வயது), சுதர்சன் ஹரிப்பிரசாத் (10 வயது) ஆகிய 3 மாணவர்கள் சம்பியன் வெற்றிக் கிண்ணங்களையும், அச்சுதா மதிவதனன் (9 வயது) கேனுஜா மோகனகுமார் (8 வயது) ஆகிய 2 மாணவர்கள் முதலாம் இடத்தையும் விதுஷியா மதிவதனன்(8 வயது), பிரணவன் யதுஷ் (9 வயது), ஷகாணி கேதீசன் (7 வயது )வினோஷ்கா பிரசன்னா (10 வயது), அஷ்வினி அனோஜன் (9 வயது), சிவகாரன் குருப்பிரசாத் (6 வயது) ஆகிய 6 மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், சயந்தன் தரணிகன், சத்யகி இளங்குமரன், சாஹித்யா கபிலன், மதுரந்தி சதீஸ்வரன், ஐதிகா சதீஸ்வரன், அஷ்மிதா ரகுரட்ணம், அமுதகரன் அபி னாஷ், தேவசிறீ காந்தரூபன், கபிலன் சாஜித், கருணியா சபேசன், தனதீபன் அக்ஷயன், அஷ்விதா இந்திரகாசன், அபிஷா கோகிலராஜ், ஆஹானியா ரோஹித், ஜெயக்குமார் ஹிருஷிகன், சசிகரன் அனிஷ் ஆகிய 16 மாணவர்கள் சர்வதேச ரீதியாக மூன்றாம் இடத்தையும் தமதாக்கிக் கொண்டனர்.
இம்முறை சிறப்பாக முதல் தடவையாக திருநெல்வேலி யுசிமாஸ் நிலையத்தில் இருந்து யுசிமாஸ் உலகக் கிண்ணப் போட்டியில் பங்கு பற்றி அச்சுதா மதிவதனன், சயந்தன் தரணிகன் வெண்கல கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.
பயிற்றுவிப்பாளர்களின் மாதக்கணக்கான அர்ப்பணிப்பும், பல வருட அனுபவமுமே இந்த இளையவர்களின் வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.
யுசிமாஸ் திருநெல்வேலிக் கிளையின் 20 வருட சாதனைப் பயணம், புத்தாக்கம் மிக்க மாணவர்களை உருவாக்குவதில் பெரும் வெற்றி கண்டிருப்பதனை சர்வதேச போட்டி முடிவுகள் நிரூபித்துள்ளன.
சர்வதேச மனக் கணிதப் போட்டியில் திருநெல்வேலி யுசிமாஸ் நிலையம் கடந்த 8 வருடங்களாக சர்வதேசப் போட்டிக்கு மாணவர்களை அனுப்பி வெற்றிப் பயணத்தைத் தொடர்கின்றது.
30 இற்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றிய சர்வதேச மனக் கணிதப் போட்டியில் யாழ். மண்ணின் மாணவர்கள் வெற்றி வாகைசூடி நாட்டுக்கும் பெருமை சேர்த்தனர்.