கனடாவில் முதியவர் ஒருவர் ஸ்கை டைவிங் செய்து அசத்தியுள்ளார்.

5 months ago


கனடாவில் நூறு வயதான முதியவர் ஒருவர் 'ஸ்கை டைவிங்' சாகசம் செய்து அசத்தியுள்ளார்.

நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கில் இந்த சாகச நிகழ்வில் முதியவர் பங்கேற்றுள்ளார்.

வானிலிருந்து குதித்து குறித்த முதியவர் சாகசம் செய்துள்ளார்.

பரசூட்டின் உதவியுடன் உயரப் பறக்கும் விமானத்திலிருந்து குதித்து குறிப்பிட்ட அளவு தூரம் ஸஸ்கை டைவிங் செய்துள்ளார்.

தாம் இரண்டாம் உலகப் போரின் போது இந்த பயிற்சிகளை பெற்றுக் கொண்டார் என நூறு வயதான எட் மார்ஷல் தெரிவிக்கின்றார்.

ஒன்றாரியோ மாகாணத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மார்ஷலின் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் எனப் பலரும் பங்கேற்று அவரை உற்சாகப்படுத்தியிருந்தனர்.

சுமார் 11,000 அடி உயரத்திலிருந்து குதித்து முதியவர் குதித்து சாகசம் செய்துள்ளார்.

கனடிய இராணுவப் படையின் அடம் வின்னிகிக் என்பவருடன் இணைந்து இந்த முதியவர் வானில் இருந்து குதித்துள்ளார்.

ஒரு இலட்சம் டொலர்களை திரட்டும் நோக்கில் இந்த சாகசம் செய்யப்பட்டுள்ளது.