யாழ்.மாவட்ட கூட்டுறவுச் சபையின் ஏற்பாட்டில் 102 ஆவது சர்வதேச கூட்டுறவு தினவிழா.

4 months ago


யாழ்.மாவட்ட கூட்டுறவுச்சபையின் ஏற்பாட்டில் 102 ஆவது சர்வதேச கூட்டுறவு தினவிழா மாவட்ட கூட்டுறவுச்சபைத் தலைவர் க.மகாதேவன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வானது இன்று(28.08.2024) யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கை தேசிய கூட்டுறவுச் சபை பணிப்பாளர் ஜி.டி. சரத்வீரசிறி, சிறப்பு விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும், கூட்டுறவுச் சங்கங்களின் தலைவருமான லிங்கநாதன், கௌரவ விருந்தினராக கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டுறவு தின விழாவை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையை இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.