கச்சதீவுப் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா மார்ச் மாதம் 14,15ஆம் திகதிகளில் இடம்பெறும்
2 months ago

கச்சதீவுப் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது
2025ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவை இம்முறை மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டப் பதில் செயலாளரின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கைக் கடற்படை, நெடுந்தீவுப் பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் இந்தத் திருவிழாவை மேற்கொள்ள நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன - என்றுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
