யாழ்ப்பாணத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பஸ் கங்கை பாலத்துக்கு அருகே விபத்து

5 months ago


யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் 30 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.